தொடங்கியது 11 வது ஐபிஎல் கிரிக்கெட்….பட்டையை கிளப்புமா சிஎஸ்கே ?  2 விக்கெட்டை வீழ்த்தி இப்போ பௌலிங்….

Asianet News Tamil  
Published : Apr 07, 2018, 09:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தொடங்கியது 11 வது ஐபிஎல் கிரிக்கெட்….பட்டையை கிளப்புமா சிஎஸ்கே ?  2 விக்கெட்டை வீழ்த்தி இப்போ பௌலிங்….

சுருக்கம்

IPL first match mumbai Vs chennai

தொடங்கியது 11 வது ஐபிஎல் கிரிக்கெட்….பட்டையை கிளப்புமா சிஎஸ்கே ?  2 விக்கெட்டை வீழ்த்தி இப்போ பௌலிங்….

11 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். தற்போது மும்பை அணி 14  ஓவர்களில் 111  ரன்களை எட்டியுள்ளது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார்.  பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில்,  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.   2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பரம எதிரியான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

தற்போது மும்பை அணி 14 ஓவர்களில் 111 ரன்களை எட்டியுள்ளது. மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!