ஐபிஎல்-லில் கோடி கோடியாக புரளும் பணம்..! ஐபிஎல் எங்களுக்கு தேவையில்லை.. ஆனாலும் நாங்கதான் நம்பர்-1.. மார்தட்டும் பாகிஸ்தானி

First Published Apr 7, 2018, 3:16 PM IST
Highlights
waqar younis opinion about ipl


ஐபிஎல் தொடரில் விளையாடமலே பாகிஸ்தான் அணி தான் சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை மற்ற நாடுகள் தவிர்த்துவிட்டன. அதன்பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானிற்கு சென்று டி20 தொடர் ஆடியது. அந்த தொடரை 3-0 என பாகிஸ்தான் வென்றது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய அந்த அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறது. தொடர்ந்து 7 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகளில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விளையாடுகிறார்கள். ஆனால், எங்கள் நாட்டு வீரர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் பங்கேற்காமலே, டி20 தரவரிசையில் நாங்கள் முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் கூட எங்கள் நாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். எங்கள் நாட்டில் உள்ள சிறுவர்கள் கூட கிரிக்கெட் விளையாடுகிறார்கள், எங்கள் நாட்டு வீரர்கள் பணம் சம்பாதிப்பதற்காக கிரிக்கெட் விளையாடவில்லை, மாறாக, கிரிக்கெட் விளையாட்டை காதலிக்கிறார்கள். உண்மையான கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மாறி, தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாடினால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2 கோடிவரை சம்பாதிக்க முடியும் அதனால் அங்கே செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

click me!