
ஐபிஎல் 11வது சீசன் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. சூதாட்டப் புகார் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி தலைமையில் இந்த ஆண்டு மீண்டும் களமிறங்குகிறது.
அதனால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சென்னை அணியின் ரசிகர்களும் மஞ்சள் ஆடையில் களமிறங்கும் தோனியின் படையை காண ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கால அட்டவணை வெளியாகியுள்ளது. ஏப்ரல் 7ல் நடக்கும் முதல் போட்டியில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இரண்டு முறை ஐபிஎல் டைட்டில் வின்னர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.