காலில் காயம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rahul Dravid Rajasthan Royals training camp with crutches: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால் அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திடீரென காலில் காயம் அடைந்தார்.
காலில் காயம் அடைந்த ராகுல் டிராவிட்
தனது மகன் அன்பாய் உடன் கிளப் கிரிக்கெட் விளையாடும்போது அவர் காலில் காயம் அடைந்தார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்த நிலையில், காலில் அடைந்த காயத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ராகுல் டிராவிட்.
அதாவது காலில் காயம் அடைந்த ராகுல் டிராவிட்டால் சரியாக நடக்க முடியாத நிலையில், அவர் ஊன்றுகோல் உதவியுடன் ஜெய்ப்பூரில் நடந்த பயிற்சி முகாமுக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ராகுல் டிராவிட் காலில் பெரிய காயத்துடன் ஊன்றுகோல் உதவியுடன் வந்திறங்கும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
10 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.8.5 லட்சம்! ஐபிஎல் மூலம் ரூ.7,000 கோடி அள்ளப்போகும் அம்பானி!
ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாம்
பின்பு சேரில் அமர்ந்தபடி ராஜஸ்தான் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதை பார்வையிட்ட ராகுல் டிராவிட், இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோரிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து சில வீரர்களுக்கு பேட்டிங் குறித்த சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த ராகுல் டிராவிட், முழு பயிற்சியையும் பார்த்த பிறகே அங்கு இருந்து சென்றார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நினைத்திருந்தால் அறையிலேயே ஓய்வு எடுத்து இருக்கலாம். ஆனால் காயம்பட்ட நிலையிலும் அவர் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டது கிரிக்கெட் மீதான, தனது பொறுப்பு மீதான அவரது அர்ப்பணிப்பு உணர்வை காட்டுவதாகவே உள்ளது.
நெட்டிசன்கள் மெய்சிலிர்ப்பு
ராகுல் டிராவிட்ட்டின் அர்ப்பணிப்பை நெட்டிசன்கள் மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர். ''சார் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? இப்படி எந்த ஒரு கோச்சையும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
Sanju Samson: ஐபிஎல் ரூல்ஸை மாற்ற வேண்டும்! திடீரென பொங்கிய சஞ்சு சாம்சன்! என்ன விஷயம்?