
டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டரும், மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவருமான ரோவ்மன் பாவெல் இதுவரை தனது தந்தையைச் சந்திக்கவில்லை என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் ரோவ்மன் பாவெல் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்ததையடுத்து, பாவெலை ஏலத்தில் ரூ.2.80 கோடிக்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது.
2022 ஐபிஎல் தொடரில் பாவெலின் ஸ்ட்ரைக் ரேட் 162 ஆக இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டபோது, தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்து பிரமிக்க வைத்தார்.
இந்நிலையில் ரோவ்மென் பாவெல் கிரிக்இன்போ தளத்துக்கு உருக்கமான பேட்டியளித்துள்ளார். அதில்அவர் கூறியதாவது “ நான் இதுநாள்வரை எனது தந்தையை சந்தித்துகூட இல்லை. என் தாய் என்னை வயிற்றில் சுமதந்திருந்தபோது, அதாவது நான் என் தாய் வயிற்றில் கர்ப்பமாக இருந்தபோது, கருவை கலைக்குமாறு எனது தந்தை என் தாயை வற்புறுத்தினார். ஆனால், என் தாய் ஜோன் அதற்கு உடன்படாமல் என்னைப் பெற்றெடுத்தார். இந்தக் கதையை என்னிடம் என் தாய் ஜோன் தெரிவித்தார்
ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே பானிஸ்டர் மாவட்டத்தில் 2 அறைகள் மட்டுமே இருக்கும்சிறிய வீட்டில்தான் நான் பிறந்தேன். என்னையும், என் சகோதரியையும் என் தாய் ஜோன்தான் கஷ்டத்துடன் வளர்த்தார்.
என் தாயைப் பற்றி கூறுவதற்கு ஆங்கிலத்தில் வார்த்தைகள் போதாது. நான் எப்போதெல்லாம் மனம்தளர்ந்து இருப்பேனோ, எப்போதெல்லாம் பெரிய சவாலான சூழலை எதிர்கொள்வேனோ, அப்போது, நான் இதை மனதில் நினைத்துக் கொள்வேன். “உனக்காக எதையும் செய்யவில்லை. இதை உன் தாய்க்காகவும், சகோதரிக்காகவும் செய்கிறார். அவர்களின் அன்புக்காக செய்றாய் என்று நினைத்துக்கொள்வேன்” நான் பிறந்தபோது இருவரும் வாழ்ந்த வாழ்க்கையைவிட தற்போது இருவருக்கும் நல்ல வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் என்னால்ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். முதலில் 2 சிக்ஸர்களை அடித்தபோது, அடுத்ததாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்தேன் 3-வதாக நோபால் வந்தபோது அதையும் சிக்ஸராக அடித்தேன். ஆனால், நடுவர் நோபால் கொடுக்கவில்லை. கிரிக்கெட் வீரர்களாகிய நாம் நடுவர் முடிவுப்படி செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.