அவங்க 2 பேரும் சரியா ஆடலைனாலும் கண்டிப்பா டீம்ல இருப்பாங்க!! அந்த பையன வேணா தூக்கிட்டு தமிழ்நாட்டு தம்பியை சேர்த்துக்குவோம்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 23, 2018, 11:33 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறைப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலேயே ஆட கிடைத்த வாய்ப்பை குருணல் பாண்டியா பயன்படுத்திக்கொள்ளவில்லை. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் குருணல் பாண்டியாவை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறைப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலேயே ஆட கிடைத்த வாய்ப்பை குருணல் பாண்டியா பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். 4 ஓவர்கள் வீசி 55 ரன்களை வாரி கொடுத்த குருணல் பாண்டியா, இலக்கை விரட்டும்போது கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை வீணடித்து விக்கெட்டையும் பறிகொடுத்து அணிக்கு நெருக்கடியை உருவாக்கினார். குருணல் பாண்டியாவின் பவுலிங் எடுபடாத காரணத்தால் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் அவரை அணியில் சேர்த்து இந்திய அணி ரிஸ்க் எடுக்காது. எனவே அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

கடந்த போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கியதோடு ஒரு கேட்ச்சையும் தவறவிட்ட இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை. அதேபோல பேட்டிங்கில் சொதப்பிய கேஎல் ராகுலும் அணியிலிருந்து நீக்கப்படமாட்டார். அவரும் அணியில் நீடிப்பார். அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படுவதென்றால், குருணல் பாண்டியா நீக்கப்பட்டு சுந்தர் சேர்க்கப்படுவதை தவிர வேறு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை. 

இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது. 
 

click me!