தினேஷ் கார்த்திக் அடிச்சாலே இந்தியா வெற்றிதான்!! வரலாறு என்ன சொல்லுதுனு பாருங்க

By karthikeyan VFirst Published Nov 23, 2018, 10:04 AM IST
Highlights

கடைசி ஓவரில் குருணல் பாண்டியா ஒரு பந்தை அடிக்காமல் விட்டு, அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்ததால் இரண்டு பந்துகள் வீணாகின. இதனால் கடைசி மூன்று பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவானது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி போராடியபோதிலும் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 30 ரன்களை விளாசினார்.

கடைசி ஓவரில் குருணல் பாண்டியா ஒரு பந்தை அடிக்காமல் விட்டு, அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்ததால் இரண்டு பந்துகள் வீணாகின. இதனால் கடைசி மூன்று பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவானது. இந்த மொத்த நெருக்கடியும் தினேஷ் கார்த்திக்கின் மேல் இறங்கியது. அதுவும் மைதானம் பெரியது என்பதால், ஸ்லோ டெலிவரியை போட்டு தூக்கி அடிக்க வைத்து தினேஷை வீழ்த்திவிட்டனர். 

ஆனால் இதுபோன்ற நெருக்கடியான இக்கட்டான சூழலில் பின்வரிசையில் களமிறங்கி கடைசி நேர அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் களத்தில் நின்ற போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணி வெற்றிதான் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்ததை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் ஆடிய டி20 போட்டிகள் அனைத்திலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் ஆட்டமிழந்த போட்டிகளில் அணியும் தோல்வியடைந்தது. 

இந்திய அணி இலக்கை விரட்டியபோது கீழ்வரும் 10 இன்னிங்ஸ்களில் தினேஷ் கார்த்திக் இறுதிவரை களத்தில் நின்ற 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திகி அவுட்டான இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 

31*(28), 17(12), 4*(1), 18*(12), 2*(2), 39*(25), 29*(8), 31*(34), 0(0)*, 30(13).
 

click me!