Satender Malik: நடுவரை அறைந்த மல்யுத்த வீரருக்கு வாழ்நாள் தடை..! ஆத்திரத்தால் கெரியரை இழந்த சதேந்தர் மாலிக்

By karthikeyan VFirst Published May 17, 2022, 9:48 PM IST
Highlights

காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டியில் நடுவரை தாக்கியதால் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த வீரர் சதேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

காமன்வெல்த்துக்கான மல்யுத்த போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டி டெல்லியில் கே.டி.ஜாதவ் மைதானத்தில் நடந்தது. இதில் 125 கிலோ எடைப்பிரிவிற்கான ஆடவர் இறுதிப்போட்டியில் விமான படை அதிகாரியும் மல்யுத்த வீரருமான சதேந்தர் மாலிக் மற்றும் மோஹித் ஆகிய இருவரும் மோதினர். 

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் சதேந்தர் 3-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, ஆட்டம் முடிய 18 வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், சதேந்தரை டேக் டவுன் செய்து மேட்டை விட்டு வெளியே தள்ளினார். டேக் டவுனுக்கு 2 புள்ளிகளும், வெளியே தள்ளியதற்கு ஒரு புள்ளியும் என மொத்தமாக 3 புள்ளிகளை நடுவர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கள நடுவர் ஒரு புள்ளி மட்டுமே வழங்கினார். இதையடுத்து வீடியோ மூலம் ரிவியூ செய்து முடிவெடுக்க வேண்டும் என்று மோஹித் கோரிக்கை விடுத்தார். 

மோஹித்தின் கோரிக்கையை ஏற்று ரிவியூ செய்யப்பட்டது. அந்த ரிவியூவில் மோஹித்துக்கு டேக் டவுனுக்காக 2 புள்ளிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இருவரும் 3 புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் 3-3 என சமனடைந்தது. மல்யுத்த விதிப்படி, போட்டி டிராவானால், கடைசி புள்ளியை பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில், மோஹித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் செம கடுப்பான சதேந்தர் மாலிக், நடுவர் ஜக்பிர் சிங்கை அறைந்து கீழே தள்ளினார். 

சதேந்தர் மாலிக்கின் செயலால் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சதேந்தர் மாலிக்கிற்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. எனவே இனிமேல் சதேந்தர் மல்யுத்த களத்திற்கு செல்லவே முடியாது. அவரது அவசரம் மற்றும் ஆத்திரத்தால் மல்யுத்த கெரியரே முடிவுக்கு வந்தது.
 -
இதனால் மைதானமே அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து சந்தேந்தர் சிங் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம், சத்தேந்தர் மாலிக்pகற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. காமன்வெல்த் தகுதி சுற்றில் நடுவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!