Sangram Singh : உலக புகழ்பெற்ற MMA போட்டிகளில் இந்திய வீரர் சங்ராம் சிங் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
சர்வதேச மல்யுத்த வீரரும், காமன்வெல்த் ஹெவி வெயிட் மல்யுத்த சாம்பியனுமான இந்திய வீரர் சங்ராம் சிங், கலப்பு தற்காப்புக் கலைகளில் (MMA - Mixed Martial Arts) தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். காமா சர்வதேச சண்டை சாம்பியன்ஷிப்பில் சங்ராம் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். சங்ராம் சிங்கின் இந்த வெற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள வெற்றியாகும். ஒரு நிமிடம் மற்றும் முப்பது வினாடிகளில் பாகிஸ்தான் நாட்டு வீரர் அலி ரசா நசீரை அவர் தோற்கடித்துள்ளார்.
சங்ராம் சிங்கின் இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது, 93 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஒருவர் பதிவுசெய்த அதிவேக வெற்றியைக் குறிக்கிறது மற்றும் இந்திய விளையாட்டுகளுக்கு, குறிப்பாக MMA உலகில் ஒரு இந்திய மல்யுத்த வீரர் வெற்றியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். ஃபிட் இந்தியா ஐகானாக ஏற்கனவே திகழ்ந்து வரும் சங்ராம் சிங், தனது பாரம்பரிய மல்யுத்தத்திலிருந்து MMAக்கு மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
undefined
Ind Vs Ban: தோல்விகளை விட அதிக வெற்றி: 92 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைத்த இந்திய அணி
MMA போட்டிகளில் அவருடைய இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிங் தனது சாதனையைப் பற்றி பெருமையோடு ஊடகங்களிடம் பேசியுள்ளார், “இந்த வெற்றியை இந்தியாவுக்கு கொண்டு வந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த உலகளாவிய அங்கீகாரம் இந்திய அரசாங்கத்தை MMA க்கு ஆதரவளிப்பதற்கும், இளம் விளையாட்டு வீரர்களை இந்த விளையாட்டைத் தொடர ஊக்குவிக்கும் என்றும் நான் நம்புகிறேன்" என்றார் அவர்.
இந்த வெற்றி, சங்கிராம் சிங்கின் தனிப்பட்ட சாதனையை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச MMA அரங்கில் இந்தியப் போராளிகளின் எழுச்சியையும் அடையாளம் காட்டுகிறது. இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய ஆண் மல்யுத்த வீரர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்திய விளையாட்டு வீரர்களை MMA விளையாட்டுகளில் வழிநடத்தி ஊக்கப்படுத்த சிங் தயாராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காமா சர்வதேச சண்டை சாம்பியன்ஷிப் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது, இதில் பதினொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் டெஸ்டில் 23 ரன் அடித்து கெத்தாக உலக சாதனை படைத்த விராட் கோலி