இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 515 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராடி வருகிறது.
இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரி்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் ஏற்கனவே முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 515 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கியது.
அட இங்க வந்து நில்லுப்பா: வங்கதேசத்தினரின் பீல்டிங்கை சரி செய்த ரிஷப் பண்ட் - ரசிகர்கள் சிரிப்பலை
முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட் சரிந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொண்ட வங்கதேசம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் ஜாஹீர் ஹாசன் 33, ஷத்மன் இஸ்லாம் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
அதே போன்று மொமினோல் ஹக், முஸ்டபிகூர் ரஹீம் தலா 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் ஆட்டம் இழந்தனர். உசைன் ஷான்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது.
நாங்க செஞ்சது தப்பு தான் மன்னிச்சிரு மச்சான்: போட்டியின்போது சிராஜிடம் மன்னிப்பு கேட்ட ரோகித், பண்ட்
இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராடி வருகிறது.