கோ கோ உலகக்கோப்பை தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய மகளிர் கோ கோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாக்டர் முன்னி ஜூன் இந்திய அணியின் திட்டம் குறித்து பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
கோ கோ உலகக்கோப்பை 2025
'கோ கோ உலகக் கோப்பை 2025' தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நாளை (ஜனவரி 13) முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா முதன்முறையாக இந்த தொடரை நடத்த உள்ள நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து திறமையான வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோ கோ அணியின் தலைமைப் பயிற்சியாளர்
இந்நிலையில்,Asianet Newsable ஹீனா ஷர்மாவுக்கு, இந்திய மகளிர் கோ கோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாக்டர் முன்னி ஜூன் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் பயணம் குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் உலகக் கோப்பை என்பது ஒரு போட்டி மட்டுமல்ல, வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பல வருட அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் உச்சக்கட்டத்தையும் குறிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
"உண்மையைச் சொல்லப் போனால், என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாங்கள் சேற்றில் கோ கோ விளையாடினோம். இதுபோன்ற வசதிகள் எதுவும் இல்லை. ஒருவர் கனவு கண்டால் மட்டுமே அவர்களின் கனவுகள் நனவாகும் என்று கூறப்படுகிறது. கோ கோ இதுபோன்ற ஒரு மட்டத்தில் விளையாடப்படும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டதில்லை" என்று டாக்டர் ஜூன் தெரிவித்தார்.
இந்தியா யாருடன் போட்டி?
நாளை (ஜனவரி 13) ஆண்கள் பிரிவில் இந்தியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் கோ கோ உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மகளிர் பிரிவில், இந்திய அணி ஜனவரி 14ம் தேதி தென் கொரியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியை தொடங்கும்.
கோ கோ உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 39 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 20 அணிகளும் மற்றும் பெண்கள் பிரிவில் 19 அணிகளும் கலந்து கொள்வதால் இந்த தொடர் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் உள்ளது. லீக் போட்டிகள் ஜனவரி 16 வரை நடைபெறும், பிளே ஆஃப் போட்டிகள் ஜனவரி 17 அன்று தொடங்கும். இறுதிப் போட்டி ஜனவரி 19 அன்று நடைபெறும்.
மகளிர் பிரிவில் 19 அணிகள்
இதேபோல் மகளிர் பிரிவில் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 19 அணிகள் உள்ளன, இந்தியா அணி ஏ பிரிவில் ஈரான், மலேசியா மற்றும் தென் கொரியாவுடன் உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் மற்றும் இரண்டு சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பங்கேற்புடன், உலகக் கோப்பை இந்த விளையாட்டின் வளர்ந்து வரும் சர்வதேச இருப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளி லட்சியங்களை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரதிய டாக்கிங் சிஸ்டம் அறிமுகம், புதுமை மற்றும் முன்னேற்றத்தின் இதேபோன்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது.
பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பங்கேற்புடன், கோ கோ உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் இந்த விளையாட்டு சர்வதேச அளவில் உயர்ந்து வருவதை காட்டுகிறது.
இந்த தொடரில் இந்திய அணிகள் பிரகாசிக்கத் தயாராக இருக்க, அதை பார்க்க இந்திய ரசிகர்கல் மட்டுமின்றி உலக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கோ கோ உள்ளூர் மைதானங்களில் இருந்து உலக அரங்கிற்கு வந்துள்ளது. ஆகவே இந்த தொடர் முழுவதும் பரபரப்புக்கும், கொண்டாட்டத்துக்கும் பஞ்சம் இருக்காது.