கோ கோ உலகக் கோப்பை: 'சவாலுக்கு நாங்கள் ரெடி'; பிரியங்கா இங்கிள் உற்சாகம்; பிரத்யேக பேட்டி!

By Rayar r  |  First Published Jan 11, 2025, 7:53 PM IST

கோ கோ உலகக்கோப்பை தொடர் ஜனவரி 13ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் பிரியங்கா இங்கிள் 'சவாலுக்கு நாங்கள் ரெடி' என உற்சாகமாக பேட்டியளித்துள்ளார். 


கோ கோ உலகக் கோப்பை 2025

'கோ கோ உலகக் கோப்பை 2025' தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ஜனவரி 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான இந்திய அணிகளை இந்திய கோ கோ கூட்டமைப்பு அறிவித்தது. ஆண்கள் அணிக்கு பிரதிக் வைக்கரும், பெண்கள் அணிக்கு பிரியங்கா இங்கிளும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

மகளிர் அணியின் கேப்டனாக பிரியங்கா இங்கிள் நியமிக்கப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தேசிய அளவில் மற்றும் தேசிய அணிக்காக அவர் செய்த சாதனைகள் அவரை கேப்டன் பொறுப்பில் உட்கார வைத்துள்ளது.

மகிழ்ச்சியுடன் பேசிய பிரியங்கா

இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய பிரியங்கா இங்கிள், தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக கூட்டமைப்புக்கும் அணி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.மேலும் தனது மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றும் கூறினார். 

இது தொடர்பாக Asianet Newsable-க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ''எல்லோரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியின் கேப்டனாக நியமித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்ட பிறகு நான் எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளில் விவரிக்க கடினம்''என்றார்.
 

அணியின் தயாரிப்பு மற்றும் உத்தி

மேலும் அவர் தான் பிறந்த மகாராஷ்டிராவில் தோன்றிய கோ கோ விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடுவதும், அணிக்கு தலைமை தாங்குவதும் குறித்த தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். 23 வயதான பிரியங்கா இங்கிள் அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக அணியின் தயாரிப்பு மற்றும் உத்தி குறித்தும் பேசினார். 

''கோ கோ விளையாட்டு முதலில் மகாராஷ்டிராவில் விளையாடப்பட்டது, நான் மகாராஷ்டிராவுக்காக விளையாடுகிறேன். 4வது ஆசிய கோ கோ சாம்பியன்ஷிப்பில் ஒரு வீராங்கனையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இப்போது, கோ கோ உலகக் கோப்பையில் தேசிய அணிக்கு தலைமை தாங்குகிறேன்'' என்று பிரியங்கா இங்கிள் புன்னகை மலர தெரிவித்தார்.

ராணி லட்சுமிபாய் விருது 

தொடர்ந்து பேசிய அவர் “போட்டிக்கு முன்னதாக கடந்த ஒரு மாதமாக முகாம் நடந்து வருகிறது. பயிற்சியாளர்கள் எங்களை கோ கோ உலகக் கோப்பைக்கு தயார்படுத்தியுள்ளனர். நாங்கள் கடுமையான உணவுமுறையைப் பின்பற்றி வருகிறோம், காயம் ஏற்படாமல் தடுப்பதுடன், முகாமின் போது உளவியல் விரிவுரைகளும் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இரண்டு பயிற்சி அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான எங்கள் உத்தியை நாங்கள் தயார் செய்துள்ளோம். இந்திய அணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். 

பிரியங்கா இங்கிள் கடந்த 2016 முதல் இந்திய கோ கோ அணியில் விளையாடி வருகிறார். மேலும் 2016 ஆசிய கோ கோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். இங்கிள் 5 வயதிலிருந்தே இந்த விளையாட்டை விளையாடி வருகிறார், மேலும் சப்-ஜூனியர் நேஷனல்ஸில் அவரது சிறப்பான செயல்திறனுக்காக இலா விருதையும், 2022 இல் சீனியர் நேஷனல்ஸில் அவரது சிறப்பான செயல்திறனுக்காக ராணி லட்சுமிபாய் விருதையும் பெற்றுள்ளார். 

பெண்கள் அணியில் முதல் போட்டி எப்போது? 

கோ கோ உலகக்கோப்பை தொடரில் பிரியங்கா இங்கிள் தலைமையிலான அணி 13ம் தேதி போட்டி தொடங்கும் முதல் நாளில் தென் கொரியாவுக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!