யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் தகுதி பெற்று அசத்தல்...

Asianet News Tamil  
Published : May 09, 2018, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் தகுதி பெற்று அசத்தல்...

சுருக்கம்

Indian table tennis player qualifies for Youth Olympic Games

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மானவ் தாக்கர் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டி அர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிப் போட்டி பாங்காக்கில் நடைபெற்றன. 

இதில் இந்தியாவின் மானவ் தாக்கர் மற்றும் சிங்கப்பூரின் ஜோஷ் சுவா மோதினர். விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 11-4, 11-7, 11-2, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ் சுவாவை வென்று யூத் ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெற்றார் மானவ் தாக்கர்.

இது தொடர்பாக மானவ் தாக்கர், "ஏற்கெனவே இரண்டு முறை யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தேன். பயிற்சியாளர் மாசிமோ காஸ்டான்டினி உரிய நேரத்தில் அறிவுரை கூறியதால் நம்பிக்கை ஏற்பட்டு சிறப்பாக விளையாடினேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பயிற்சியாளர் மாசிமோ, "அர்ச்சனாவுக்கும் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற மேலும் சில வாய்ப்புகள் உள்ளன. அவரும் தகுதி பெறுவார் என நம்பிக்கை" என்று தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?