IND vs SA : "நாங்க ரெடி.. நீங்க ரெடியா..?" முழு பலத்தோடு களமிறங்கும் இந்திய அணி.. வீரர்கள் விவரம் இதோ...

By Ganesh RamachandranFirst Published Dec 8, 2021, 9:29 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் ஆச்சர்யங்கள் இந்த அணித் தேர்வில் இல்லை என்றாலும், ரிஷப் பந்த், முகமது ஷமி, பும்ப்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்

டி20 கேப்டன் பொறுப்புடன் இனி இந்திய ஒருநாள் அணிக்கும் ரோஹித் ஷர்மா தான் கேப்டன் என்று அசத்தலாக அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதோடு நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியினர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர், முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதி துவங்க இருந்த இந்த சுற்றுப்பயணம் கோவிட் தொற்று பயம் காரணமாக வரும் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக நீடிக்கிறார். புதிய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே, மோசமான ஃபார்மில் இருப்பதாலும், காயத்தால் அவதிப்பட்டு வருவதாலும் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடர் அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொடராக இருக்கும். நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஹானே இடத்துக்கு அடிபோட்டுள்ளார். விளையாடும் லெவனில் மூன்றாவது டவுனில் இறங்கப்போவது ஸ்ரேயாஸா அல்லது ரஹானேவா என்பது சுவாரஸ்யமான கேள்வி.

நியூஸிலாந்து தொடரில் விளையாடாத முகமது ஷமி, பும்ப்ரா, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் தென்னாப்பிரிக்கத் தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்புகின்றனர். இதனால் முழு பலத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் ஹீரோக்களில் ஒருவரான ஹனுமா விஹாரிக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஹானே தொடர்ந்து சொதப்புவதாலும் கூட நடுவரிசையை பலப்படுத்த அவரைப் பயன்படுத்த தேர்வுக்குழு திட்டமிட்டிருக்கலாம்.

அணி விவரம் : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை-கேப்டன்) கேஎல் ராகுல், மயங் அகர்வால், சேடேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (கீப்பர்), வ்ரிடதிமான் சஹா (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின் ஜெயந் யாதவ், இஷாந்த் சர்மா, முகமத் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்டுல் தாகூர், முகமத் சிராஜ்.

ரிசர்வ் வீரர்கள் : நவ்தீப் சைனி, சௌரப் குமார், தீபக் சாஹர், அர்ஸான் நக்வாஸ்வாலா

click me!