கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தையில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், நெதர்லாந்தின் ஸ்க்லோசர், பிரேசிலின் லூகாஸ் மற்றும் அமெரிக்காவின் ஜேஸ்ம் ஆகியோரை 148 – 148, 143 – 148 மற்றும் 146 – 148 ஆகிய நேர்செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சுத்து போட்ட பென் ஸ்டோக்ஸ்; தனி ஒருவனாக போராடிய உஸ்மான் கவாஜா: ஆஸி, 386க்கு ஆல் அவுட்!
இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் 2ஆவது முறையாக தங்கம் வென்றார்.
இது தவிர உலகக் கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் 2 வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கமும் கைப்பற்றியிருக்கிறார்.
ருதுராஜ் கெய்க்வாட் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்!
Abhishek Verma makes his way to the gold medal match in Medellin. pic.twitter.com/GEKxBUVuck
— World Archery (@worldarchery)