National Sports Day | பிரதமர் மோடியின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் எங்கள் பலம்! - ஓலிம்பிக் வீரர்கள்

By Dinesh TG  |  First Published Aug 29, 2024, 2:59 PM IST

பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். மனு பாகர், சர்பஜோத் சிங், அனுஷ் அகர்வால் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் பிரதமரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
 


அண்மையில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தினர். இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்தன. ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சிறந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தங்களை எவ்வாறு ஊக்குவித்தார் என்பதை ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்கள் தெரிவித்தனர்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மனு பாகர் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் மிக்ஸ்டு டபுள்ஸில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை இவர் தான். தன் பாரீஸ் அனுபவம் குறித்து பேசிய மனு பாகர், 'உங்கள் கடின உழைப்பையும் உங்களையும் நீங்களே நம்புங்கள். நீங்கள் இதுபோன்ற பல போட்டிகளை சந்தித்து வென்றுள்ளீர்கள். உற்சாகத்துடன் விளையாடுங்கள், வெற்றி தோல்விக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கு என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.
 

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர் சாதனைக்கு எப்படித் தயாரானார் என்பதை பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடியின் ஊக்கமும் ஆதரவும் எவ்வாறு முக்கியப் பங்காற்றியது என்பதையும் அவர் விவாதித்தார். … pic.twitter.com/8xoqO4jTSF

— Asianetnews Tamil (@AsianetNewsTM)


பாரீஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் வெண்கலப் பதக்கம் வென்ற சர்பஜோத் சிங், பிரதமர் மோடியிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார். அவர், 'பயப்படாதே, தைரியமாக விளையாடு. உன் பக்கத்திலிருந்து எந்தக் குறையும் வைக்காதே, மீதி வெற்றி தோல்வி என்பது பிறகுதான்' என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

 

 

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, சரப்ஜோத் சிங் தனது பயணத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் பிரதமர் மோடியின் ஊக்கம் தனது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது என்று தெரிவித்துள்ளார். pic.twitter.com/YWjBjLdCV1

— Asianetnews Tamil (@AsianetNewsTM)



அனுஷ் அகர்வால் கூறுகையில், பிரதமர் மோடி தன்னிடம் மராத்தியில் பேசினார் என்றார். மேலும், என்னிடம், 'கசா காயே பாவோ' என்று பேசினார். அதாவது, அவர், 'எந்த கவலையும் இல்லாமல் விளையாடுங்கள், எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் உங்கள் பயிற்சியாளரை எப்போதும் மதிக்க வேண்டும்' என்று கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தன என்றார்.

பதக்க வேட்டைக்கு தயார்; கண்கவர் நிகழ்ச்சிகளுடன் பாராஒலிம்பிக் போட்டி தொடக்கம் - பிரதமர் வாழ்த்து
 

click me!