ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!! தூக்கி எறியப்பட்ட பண்ட்.. தினேஷ் கார்த்திக் ரீ எண்ட்ரி

By karthikeyan VFirst Published Dec 24, 2018, 5:47 PM IST
Highlights

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய 2 போட்டிகளும் முடிந்ததும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் என உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய தொடர்கள் என்பதால் இந்த 2 தொடர்களுமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் இந்த தொடர்கள் உலக கோப்பைக்கான முன்னோட்ட தொடர்களாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட் இந்த தொடரில் நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பு இல்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். கேதர் ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங் ஆர்டரில் நான்காம் வரிசைக்கு தீர்வாக ராயுடு உள்ளார். 6 மற்றும் 7ம் வரிசைகளில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இறங்குவர். ஐந்தாம் வரிசை வீரராக கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறுவர்.

கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவந்தாலும் அவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அணியில் இருந்தாலும் உலக கோப்பையை மனதில் கொண்டு ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல், கலீல் அகமது, பும்ரா, ஷமி. 

click me!