நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்..?

By karthikeyan VFirst Published Dec 24, 2018, 4:43 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது கடும் போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் ஷாட்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது கடும் போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் ஷாட்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் பார்க்கப்படுகின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாமிடத்திலும் ஜோ ரூட் ஐந்தாமிடத்திலும் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருப்பதால் மூன்றாமிடத்திற்கு பின் தங்கி விட்டார். 

இவ்வாறு சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களாக இவர்கள் நால்வரும் பார்க்கப்படும் நிலையில், தனது போட்டியாளர்களாக திகழும் விராட் கோலி, ரூட், ஸ்மித் ஆகியோரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள விரும்பும் ஷாட்கள் குறித்து எந்தவித ஈகோவும் இல்லாமல் வெளிப்படையாக மனம் திறந்துள்ளார் கேன் வில்லியம்சன்.

இதுகுறித்து பேசிய கேன் வில்லியம்சன், கோலி, ரூட், ஸ்மித் ஆகிய மூவரும் உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர்கள். அவர்கள் மூவருமே முற்றிலும் வித்தியாசமான வீரர்கள். மூவரிடமிருந்தும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஜோ ரூட்டிடமிருந்து ரிவர்ஸ் ஸ்வீப்பை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல ஸ்டீவ் ஸ்மித்தோ, எந்த திசையில் வரும் பந்தையும் மிட் விக்கெட் திசையில் அபாரமாக அடிப்பார். அவரிடமிருந்து அதை கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாம் இப்படியென்றால், கோலி முற்றிலும் வேறானவர். அவர் அடிக்கும் எல்லா ஷாட்களுமே அபாரமானவை என வில்லியம்சன் மூவருக்கும் புகழாரம் சூட்டினார். 

சமகாலத்தில் தனக்கு கடும் போட்டியாளர்களாக திகழும் வீரர்களை எந்தவித ஈகோவும் இல்லாமல் வெளிப்படையாக புகழும் மனப்பான்மையும் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள விரும்புவதை வெளிப்படையாக கூறும் மனதும் அனைவருக்கும் வந்துவிடாது. 
 

click me!