ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால்...

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால்...

சுருக்கம்

Indian footballer Subrata Paul was released from the charge of doping.

ஊக்கமருந்தை வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்பதை நிரூபித்ததால் அந்தக் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டார் இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் சுப்ரதா பால்.

ஊக்கமருந்தை தான் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்பதை அவர் நிரூபித்ததால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) அவரை எச்சரித்து, குற்றச்சாட்டில் இருந்து விடுவித்ததோடு அவரது இடைநீக்கம் நடவடிக்கையும் ரத்து செய்தது.

இதுகுறித்து நாடா வெளியிட்டுள்ள அறிக்கை:

“அணிக்கான மருத்துவரை நியமித்துள்ள அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்), அவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வீரர்களுக்கு மருந்து வழங்கும்போது உரிய கவனத்துடன் செயல்படாததை விசாரணையில் ஒப்புக் கொண்ட அணியின் மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..