
ஆசிய இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு ஆறு பதக்கங்கள உறுதியாகியுள்ளன.
ஆசிய இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இளையோர் உலக சாம்பியனும், இந்தியா விரருமான சச்சின் காலிறுதியின் 49 கிலோ எடைப்பிரிவில் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஜேம்ஸ் இயான் சோலிஸை மோதி அவரை வீழ்த்தினார்.
இதையடுத்து அவர் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் பன்மோத் திடிசன்னை எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல இந்தியாவின் இடாஷ் முகமது கான் காலிறுதியின் 56 கிலோ எடைப்பிரிவில் பிலிப்பின்ஸ் வீரரான லெளரன்டே பிட்டை வீழ்த்தினார். சச்சின் 75 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் ரிகு கோன்டோவை வீழ்த்தினார். இருவரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
முகமது கான் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் ப்ளும் வாங்லாக்லேங்கையும், சச்சின் தனது அரையிறுதியில் சீனாவின் ஸு சாவ்வையும் சந்திக்க உள்ளனர்.
நவீன் பூரா (69 கிலோ), அங்கித் (60 கிலோ), ஹர்ஷ்பிரீத் ஷெராவத் (91 கிலோவுக்கு மேல்) ஆகியோரோடு சேர்த்து இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.