
பிரெஸிடென்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கணை லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
பிரெஸிடென்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது.
150 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் 70 கிலோ பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் இஸாகுலோவாவை எதிர்கொண்டார்.
இஸாகுலோவாவை வீழ்த்தியதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார் லோவிலினா. இதனால், இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆடவருக்கான 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கெளரவ் செளஹான் அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இதன்மூலம் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உறுதி
செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.