முதல் விக்கெட்டை வீழ்த்தவே முக்கும் இந்திய அணி!! ஆஸ்திரேலிய அணி நல்ல தொடக்கம்

By karthikeyan VFirst Published Dec 14, 2018, 9:58 AM IST
Highlights

பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நிதானமாக ரன்களை சேர்த்துவருகின்றனர்.
 

பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நிதானமாக ரன்களை சேர்த்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் இதிலும் வென்று தொடரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன. 

இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி புதிதான பெர்த் மைதானத்தில் காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் போட்டியை போல அல்லாமல் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகின்றனர். பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி ஆகிய நால்வருமே மாறி மாறி பந்துவீசியும் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடிவரும் ஃபின்ச் - மார்கஸ் ஹாரிஸ் ஜோடி, 20 ஓவர்களுக்கும் மேலாக ஆடிவருகிறது. 60 ரன்களுக்கும் மேல் சேர்த்து இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிவருகின்றனர்.

click me!