எங்க ஸ்பின் பவுலர்களை விட இவங்கதான் பெஸ்ட்டா..? ரஷீத் மற்றும் ரஹ்மானை டார்கெட் செய்து வெளுத்த இந்திய வீரர்கள்

 
Published : Jun 14, 2018, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
எங்க ஸ்பின் பவுலர்களை விட இவங்கதான் பெஸ்ட்டா..? ரஷீத் மற்றும் ரஹ்மானை டார்கெட் செய்து வெளுத்த இந்திய வீரர்கள்

சுருக்கம்

indian batsmen attacked rashid and rahman bowling

ஆஃப்கானிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்த ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரின் பவுலிங்கை டார்கெட் செய்து அடித்து ஆடினர் இந்திய வீரர்கள்.

அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிவருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய், இந்திய அணியைவிட தங்கள் அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாக கருத்து தெரிவித்தார். அதேபோல, அந்த அணியின் விக்கெட் கீப்பரும் கூறியிருந்தார். ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் நம்பிக்கையுடன் பேசியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் முரளி விஜய் நிதானமாக ஆட, தவானோ தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் யாமின் அஹ்மத்சாய் மற்றும் வாஃப்தார் ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசினர்.

அந்த அணியால் பெரிதும் நம்பப்பட்ட ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரின் பந்துகளை பறக்கவிட்டார் தவான். ரஷீத் கான் ஓவர்களை அடித்து ஆடினார். அதேபோல முஜீபுர் ரஹ்மான் ஓவரையும் அடித்து ஆடினார். இவர்கள் இருவரின் பந்துவீச்சையும் அதிரடியாக ஆடிய தவான், உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 87 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

தவான் அவுட்டாகிய பிறகு, ராகுலும் முரளி விஜயும் ரஷீத் கானின் பந்துவீச்சை அடித்து ஆடினர். ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கையையும், நல்ல ஸ்பின்னர்களை பெற்றிருப்பதாக கொண்டிருந்த ஆணவத்தையும் அடக்கும் விதமாக ஆடினர் இந்திய பேட்ஸ்மேன்கள். 

ஷிகர் தவான் 107 ரன்களும், முரளி விஜய் 105 ரன்களும், ராகுல் 54 ரன்களும் குவித்து அவுட்டாகினர். புஜாராவும் ரஹானேவும் களத்தில் உள்ளனர். 

ரஷீத் கான் வீசிய 17 ஓவர்களில் 105 ரன்களையும், முஜீபுர் ரஹ்மான் வீசிய 7 ஓவர்களில் 47 ரன்களையும் இந்திய வீரர்கள் குவித்தனர். போட்டிக்கு இடையே இரண்டு முறை மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. இல்லையென்றால், இன்னும் கூடுதலாக ரஷீத் கானும் ரஹ்மானும் வீசியிருப்பர். இந்திய வீரர்கள் மேலும் அடித்து ஆடி கூடுதல் பதிலடி கொடுத்திருப்பர். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!