
முதல் முறையாக இந்தியன் வங்கி கோப்பைக்கான பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது இந்திய வங்கி.
பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வலைகோல் பந்தாட்டம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளை இந்தியன் வங்கி விளையாட்டு குழு நடத்தி வருகிறது.
இந்தியன் வங்கி முதல்முறையாக பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது.
வரும் 16-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் 16 பள்ளிகள் பங்கேற்க உள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டவை. 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அனைத்து ஆட்டங்களும் லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் வாழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.