
ஜூனியர் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நியூசிலாந்தில் ஜூனியர் உலகக்கோப்பை நடந்து வருகிறது. டிராவிட் பயிற்சியளிக்கும் இந்திய அணி, தொடர் முழுதும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியையே சந்திக்காமல், இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது.
இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில், இஷான் போரல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷிவம் மாவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதையடுத்து 217 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின், தொடக்க வீரர் கல்ரா, அபார சதமடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 38.5 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4வது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.