எதிர்பார்த்த எதுவுமே கிடையாது.. கோலி திருந்திட்டாரு போலவே..? ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

By karthikeyan VFirst Published Nov 23, 2018, 1:16 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் பவுலிங் தேர்வு செய்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 

எனவே டி20 தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

வழக்கமாக ஒரு போட்டியில் சரியாக ஆடாத வீரரை அடுத்த போட்டியில் அணியிலிருந்து தூக்கி அதிரடி காட்டுவார் கோலி. அந்த வகையில் கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பிய குருணல் பாண்டியா மட்டும் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. 

ஆனால் அணியை அடிக்கடி மாற்றும் செயலை கோலியை கைவிட்டுவிட்டார் போல. இந்த முறை அணியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக்கிற்கு பதிலாக நாதன் குல்டர்நைல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது. 
 

click me!