
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.
இந்நிலையில், அந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஹாக்கி போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் 15 நிமிடங்களுக்கு எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் 19-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அஃப்ஃபான் யூசுப் அணிக்கான முதல் கோல் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், தனது 2-ஆவது கோல் அடித்தார் யூசுப். இந்நிலையில், இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியு வில்லிஸ் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 43-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டிரென்ட் மிட்டனும் கோல் அடிக்க, ஆட்டம் சமனானது. அடுத்த நிமிடமே அதற்கு பதிலடி தரும் வகையில் கோல் அடித்தார் இந்திய வீரர் ரகுநாத். ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் அற்புதமான கோலாக்கினார்.
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இறுதி வரை ஆஸ்திரேலிய அணிக்கு வேறு கோல் வாய்ப்பு வழங்காத இந்திய அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.