
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பையில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் 102.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் சிரக் காந்தி அதிகபட்சமாக 169 ஓட்டங்கள் எடுத்தார். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் சித்தார்த் கெளல் 5, பங்கஜ் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா 75 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் சேத்தேஷ்வர் புஜாரா மட்டும் அதிகபட்சமாக 86 ஓட்டங்கள் எடுத்தார்.
குஜராத் தரப்பில் சிந்தன் காஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற குஜராத், தனது இரண்டாவது இன்னிங்ஸில் 90.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பி.கே.பன்சால் 73, சிரக் காந்தி 70 ஓட்டங்கள் எடுத்தனர்.
ரெஸ்ட் ஆப் இந்தியாவின் ஷாபாஸ் நதீம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 379 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்திய அணியில் புஜாரா சதம், விருத்திமான் சாஹா இரட்டைச் சதம் கடந்தனர்.
இருவரும் ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஓட்டங்கள் குவித்து தங்களது அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.
இறுதியாக 103.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 379 ஓட்டங்கள் எடுத்து வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா.
புஜாரா 116, விருத்திமான் சாஹா 203 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வீரர் ரித்திமான் சாஹா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.