
இதுவரை ஏஐஎஃப்எஃப் என்று அழைக்கப்பட்ட அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பெயர் விரைவில் "ஃபுட்பால் இந்தியா' என்று மாற்றம் செய்யப்பட உள்ளது.
"இந்திய மகளிர் லீக்' (ஐடபிள்யுஎல்) என்ற பெயரில் மகளிருக்கான கால்பந்து போட்டியை நடத்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள் வரும் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரையில் தில்லியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் புதுச்சேரி, மணிப்பூர், ஒடிஸா, ஹரியாணா, மிúஸாரம், புணே ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில், அதுகுறித்துப் பேசிய அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் பிரஃபுல் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தற்போது நடைபெறவுள்ள போட்டிக்கு "ஏஐஎஃப்எஃப் இந்திய மகளிர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கால்பந்தை குறிப்பிடும் எந்தவொரு வார்த்தையும் இல்லாததால், போட்டியின் பெயரை "ஃபுட்பால் இந்தியா இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யுஎல்)' என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். இதற்காக "அகில இந்திய கால்பந்து சம்மேளனம்' என்ற பெயரை "ஃபுட்பால் இந்தியா' என்று மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விரைவில் அதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும்” என்று பிரஃபுல் படேல் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.