
பி.சி.சி.ஐ-யின் புதிய நிர்வாகிகள் யார்? : இன்று அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI-யின் புதிய நிர்வாகிகள் பெயரை, உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.
BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால், அதன் தலைவர் திரு. அனுராக் தாக்கூர் உள்ளிட்ட நிர்வாகிகளை பதவிநீக்கம் செய்து, உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அத்துடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக மூத்த வழக்கறிஞர்கள் திரு. அனில் திவான், திரு. கோபால் சுப்பிரமணியம் ஆகியோரை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், இந்த வழக்கறிஞர்கள் இருவரும், புதிய நிர்வாகிகள் நியமனத்திற்காக 9 பேர் கொண்ட பட்டியலை, சீலிட்ட கவரில் வைத்து, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்தப் பட்டியலில் இருந்து, BCCI-யின் புதிய நிர்வாகிகளை, இன்று நியமிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.