டி20 இறுதி கிரிக்கெட் போட்டி..அசத்தல் வெற்றியை பெற்றுத்தந்த டோனி, ரெய்னா…

 
Published : Feb 02, 2017, 07:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
டி20 இறுதி கிரிக்கெட் போட்டி..அசத்தல் வெற்றியை பெற்றுத்தந்த டோனி, ரெய்னா…

சுருக்கம்

டி20 இறுதி கிரிக்கெட் போட்டி..அசத்தல் வெற்றியை பெற்றுத்தந்த டோனி, ரெய்னா…

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற்றன. ஒரு நாள் போட்டி தொடரை   இந்திய அணி கைப்பற்றிய  நிலையில்  மூன்று டி 20 போட்டிகளின் இறுதிப் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  இந்திய வீரர்களை பேட் செய்ய பணித்தது. முதலில்  களமிறங்கிய விராட் மற்றும் ராகுல் ஜோடியில் விராட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா தனது அதிரடி ஆட்டத்தால் 63 ரன்களை  குதித்தார்.

அவருடன் இனைந்த முன்னாள் கேப்டன் டோனியும்  அதிரடியாக ஆடி 56 ரன்களை எடுத்தார். ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

203 என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கி இங்கிலாந்து அணியின் தொடக்க  வீரரான சாம் பில்லிங்ஸ் 8ரன்களுக்கு சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். துவக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து அணியின்மற்றொரு துவக்க வீரரான ஜாசன் ராய் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.   

தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைபெவிலியனுக்கு அனுப்பினர். 16. 3 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்தியா அணிவீரர் சாஹல் நான்கு ஓவர்களுக்கு 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களைகைபற்றினார்.மற்றொரு வீரர்  பும்ரா 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

6 விக்கெட்டுகளை வீழ்த்திய  சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதும் சாஹலுக்கேவழங்கப்பட்டது.

3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!