காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்..! குருராஜா வெண்கல பதக்கம் வென்று அசத்தல்

Published : Jul 30, 2022, 06:23 PM ISTUpdated : Jul 30, 2022, 06:30 PM IST
காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்..! குருராஜா வெண்கல பதக்கம் வென்று அசத்தல்

சுருக்கம்

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கல பதக்கம் வென்றார்.   

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் 2 பதக்கங்களை வென்றுள்ளது.

பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார், ஸ்னாட்ச்சில் 113 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 135 கிலோ என மொத்தம் 248 கிலோ எடையை தூக்கிய சங்கேத் சர்கார், மலேசியாவின் பிப் அனிக்கை விட ஒரு கிலோ குறைவாக தூக்கியதால் தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

அதைத்தொடர்ந்து பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி நடந்தது. 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட குருராஜா, ஸ்னாட்ச்சில் 118 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 151 கிலோ எடையை தூக்கினார். மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கிய குருராஜா வெண்கலம் வென்றார்.

மலேசியாவின் முகமது ஸ்னாட்ச் சுற்றில் 127 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 158 கிலோ என மொத்தமாக 185 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். பப்புவா நியூ கினியா வீரர் வெள்ளி வென்றார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!