
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்கியது.
புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்திய அணி.
அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த கோலி தலைமையிலான இந்திய அணி, புணே டெஸ்டில் மோசமாக தோற்றதால், 2-ஆவது டெஸ்டின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியோ, முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில இந்தியாவை சந்திக்கிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முரளி விஜய், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக முகுந்த், கருண் நாயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகுந்த் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ராகுலும் புஜாராவும் மிகுந்த கவனத்துடன் விளையாடினார்கள். ஆனால் உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் 17 ஓட்டங்களில் லயனின் பந்துவீச்சில் வீழ்ந்தார் புஜாரா.
முதல்நாள் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராகுல் 48 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.