
வரலாற்று சிறப்புமிக்க ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியுடன், ஆஃப்கானிஸ்தான் மோதுகிறது.
ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், அந்த அணி இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. இந்திய அணி வீரர்கள், ஸ்பின் பவுலிங்கை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். எனினும் அந்த அணி ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறது.
இரு அணிகளும் மோதும் வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஐபிஎல் தொடரின் போது கழுத்தில் ஏற்பட்ட காயத்தால், கோலி இந்த போட்டியில் கலந்துகொள்ளாததால், ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.