
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கத்துக்கு ஆர்.அர்ஜூன் துரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட கைப்பந்து சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, ஆர்.அர்ஜூன் துரை தலைவராகவும், ஏ.கே.சித்திரைபாண்டியன் பொதுச்செயலாளராகவும், ஏ.பழனியப்பன் பொருளாளராகவும், எஸ்.என்.ஜெயமுருகன் சேர்மனாகவும், எஸ்.ஆர்.சீனிவாசன் இணை சேர்மனாகவும், சரண்வேல், ராஜன், பி.ஜெகதீசன் ஆகியோர் செயல் துணைத்தலைவர்களாகவும்,
உபைதுர் ரகுமான், ஏ.தினகரன், பி.பாலச்சந்திரன் எம்.பி.செல்வகணேஷ், கோகலே ஆகியோர் துணை சேர்மன்களாகவும், ஆர்.சீனிவாசன், அப்தாபுதீன், ஜோன்ஸ் பெர்லிங் ராஜா ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஸ்ரீகேசவன் அசோசியேட் செயலாளராகவும்,
ரத்னகுமார், ஆல்பர்ட் தம்பிராஜ், முத்துராஜ் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், தினகரன், ஜலால் முகைதீன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.