
உலக கோப்பை போட்டியை நேரில் காண அமெரிக்க நாட்டு ரசிகர்கள்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்தப் போட்டி ரஷியாவில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்கள் பலர் ரஷியாவை நோக்கி பயணித்து வருகிறார்கள்.
அமெரிக்க அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், அந்த நாட்டில் இருந்துதான் அதிகளவில் ரசிகர்கள் ரஷியா புறப்பட்டுள்ளனர். இந்த தகவல் விமான டிக்கெட் முன்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கால கட்டத்தில் அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு பயணமாகும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 34 சதவீதம் அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு செல்லும் நபர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 66 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.