
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் முதல் 4 போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.
தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இதே நாளில் (அக்டோபர் 29) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
அதேபோல் இந்த முறையும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று, அதே நாளில்(அக்டோபர் 29) கான்பூரில் நடைபெற்றுவருகிறது.
கடந்த ஆண்டு நடந்த போட்டியிலும் இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. ஒரே ஒரு வித்தியாசம் நடக்கும் இடம் மட்டும்தான்.
எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் நியூசியைத் தூசியாக்கி வரலாற்றை இந்திய அணி திரும்பி பார்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.