
நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடந்துவருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.
ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ஆடினர். 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சவுதியின் பந்துவீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.
அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 52வது பந்தில் அரைசதம் அடித்து, ஒருநாள் போட்டியில் தனது 35வது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி, 17 ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவும் கோலியும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.