
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸிடம் படுதோல்வி அடைந்தது இந்தியா.
உலக அணிகளுக்கான பாட்மிண்டன் சாம்பியன் போட்டி தாமஸ் (ஆடவர்), உபேர் (மகளிர்) கோப்பை என்ற பெயரில் நடைபெறுகிறது.
அதன்படி, ஆடவர் குரூப் ஏ பிரிவில் வலிமையான பிரான்ஸ் அணியை இளம்வீரர்கள் கொண்ட இந்திய அணி எதிர் கொண்டது. இதில் பிரான்ஸ் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இன்று இந்திய ஆடவர் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
அதேபோன்று, மகளிருக்கான உபேர் கோப்பை ஆட்டங்களில் கனடாவிடம் 1-4 என்ற ஆட்ட கணக்கில் இந்திய அணி வீழ்ந்தது.
இன்று ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் மோதுகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.