
இந்த உலக கோப்பையை வென்றதன் மூலம் அதிக முறை ஜூனியர் உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது.
இந்திய பெருஞ்சுவர் டிராவிட் பயிற்சியளிக்கும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, ஜூனியர் உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தட்டி சென்றது.
இந்திய அணி வெல்லும் நான்காவது ஜூனியர் உலக கோப்பை இது. இதற்கு முன்னதாக 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ளது.
நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பதன் மூலம் அதிகமுறை ஜூனியர் உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி மூன்று முறை வென்றுள்ளது. இதில், 2008ல் ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி. அதற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.