
ஒரு போட்டியில் வென்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது. அந்த வெற்றியை பெறவே நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
மூன்றாவது போட்டி வரும் வியாழக்கிழமை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், நாதன் லயன் கூறியது:
“இந்தத் தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் இந்தியா வருவதற்கு முன்பே இங்குள்ளவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள். நாங்கள் வெற்றி பெற முடியாது என ஊடகங்களில் பேசப்பட்டன. ஆனால் இப்போதைய நிலையில் நாங்கள் தொடரை வெல்லக்கூடிய சூழலில் இருக்கிறோம்.
இன்னும் ஒரு போட்டியில் வென்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
தற்போதைய நிலையில் இந்திய அணிதான் நெருக்கடியில் இருக்கிறது. எங்கள் அணிக்கு எந்த நெருக்கடியும் இல்லை.
இந்தத் தொடரை நாங்கள் 4-0 என்ற கணக்கில் தோற்போம். ஆஸ்திரேலியா சிறந்த அணியல்ல. அந்த அணி அனுபவமற்ற இளம் வீரர்களைக் கொண்டிருக்கிறது எனக் கூறினார்கள். ஆனால் உலகின் எந்த அணியையும் எந்த இடத்திலும் எங்களால் வீழ்த்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
அதை முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் நிரூபித்தோம். 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருங்கினோம். உண்மையை சொல்வதானால் இந்திய வீரர்கள்தான் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
எனது வலது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்போது ஏராளமான ஓவர்கள் வீசியிருக்கிறேன். இதுபோன்ற காயம் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படும். சதை கிழிந்திருக்கிறது அவ்வளவுதான்” என்று பேசி அசத்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.