உணவு இடைவேளை வரை 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது இந்தியா; களத்தில் ராகுல்…

 
Published : Mar 04, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
உணவு இடைவேளை வரை 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது இந்தியா; களத்தில் ராகுல்…

சுருக்கம்

India has taken up to 72 runs at lunchtime Rahul on the field

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்கியது. 

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தியா.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த கோலி தலைமையிலான இந்திய அணி, புணே டெஸ்டில் மோசமாக தோற்றது.

அதனை சரிசெய்ய 2-ஆவது டெஸ்டின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில இந்தியாவை எதிர்க்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முரளி விஜய், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக முகுந்த், கருண் நாயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகுந்த் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், முதல்நாள் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மீண்டும் ஆட்டத்தை உற்சாகமாக தொடங்கும் இந்தியா என்ற எதிர்ப்பாப்பு வலுத்துக் கொண்டே போகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு