உலகக் கோப்பை ரைஃபிள் சுடுதலில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி...

Asianet News Tamil  
Published : May 24, 2018, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
உலகக் கோப்பை ரைஃபிள் சுடுதலில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி...

சுருக்கம்

India has a gold two silver medals at World Cup Rifles

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ரைஃபிள் / பிஸ்டல் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தினர்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் 621.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். 

சகநாட்டவரான அஞ்சும் முட்கில் 621.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

இதேபிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஷ்ரேயா சக்úஸனா, 619.1 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்தார்.

அதேபோன்று, ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் இந்திய வீரர் செயின் சிங் 627.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். 

இப்பிரிவில் அமெரிக்காவின் மேத்தியூ எம்மன்ஸ் 628.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 

இதர இந்தியர்களான ககன் நரங் 621.7 புள்ளிகளுடன் 32-வது இடமும், சஞ்ஜீவ் ராஜ்புத் 621.2 புள்ளிகளுடன் 34-வது இடமும் பிடித்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்