அடி சறுக்கிய ஆஸ்திரேலியா.. இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பு!!

First Published Jun 19, 2018, 4:31 PM IST
Highlights
india has a chance to pick first position in icc odi ranking


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் வலுவான அணியாக வலம்வரும் இந்திய அணி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலிடத்தை பிடித்துவிட்டால், மற்ற அணிகள் எளிதாக முந்த முடியாது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டதால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக சரியாக ஆடாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னர் இல்லாதது மேலும் பலத்த அடியாக இருந்தது. 

இந்நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 

அதனால் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. 102 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 6வது இடத்தை பிடித்துள்ளது. 

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்திலும் 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாமிடத்திலும் உள்ளது. மூன்றாமிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை விட 9 புள்ளிகள் பின் தங்கி 113 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. 

அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்த தொடரை இந்திய அணி வென்றால், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற முடியும். இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்திவிட்டால் அந்த அணியின் புள்ளிகள் குறையும். 3-0 என தொடரை வென்றால், அந்த அணியின் புள்ளிகள் பெருமளவு குறைய வாய்ப்பிருப்பதால், இந்திய அணி முதலிடத்தை பிடித்துவிட்டால் அதன்பிறகு மற்ற அணிகள் இந்திய அணியை முந்துவது எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில் இங்கிலாந்தை தவிர மற்ற அணிகள், பெரியளவில் புள்ளிகள் வித்தியாசத்தை பெற்றுள்ளன. 
 

click me!