இந்தாண்டில் இந்தியாவிற்கு அதிகபட்ச வெற்றி…

 
Published : Dec 21, 2016, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இந்தாண்டில் இந்தியாவிற்கு அதிகபட்ச வெற்றி…

சுருக்கம்

இந்த ஆண்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 12 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் அதிகபட்சமாக 9–ல் வெற்றியை (3–ல் டிரா) பெற்றுள்ளது.

1932–ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்த 2016–ம் ஆண்டை இந்தியாவுக்கு ஜாக்பாட் ஆண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் தோல்வியை சந்திக்கவில்லை. ஜூலை – ஆகஸ்டு மாதங்களில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் செப்டம்பர் – அக்டோபரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இப்போது இங்கிலாந்தையும் 4–0 என்ற கணக்கில் ஊதித்தள்ளி விட்டது.

ஆக இந்த ஆண்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 12 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் 9–ல் வெற்றியை (3–ல் டிரா) பெற்றுள்ளது.

இது தான் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு கிடைத்த அதிகபட்ச வெற்றி எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்பு 2010–ம் ஆண்டில் 14 டெஸ்டில் 8–ல் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த ஆசிய கேப்டன் என்ற சிறப்பும் விராட் கோலியின் வசம் ஆனது. இதற்கு முன்பு ஜெயசூர்யா தலைமையில் இலங்கை அணி 2010–ம் ஆண்டில் 8 வெற்றிகளைப் பெற்று இருந்தது.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 14 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியை சந்தித்துள்ளது.

முதல் 22 டெஸ்டுகளில் இந்திய கேப்டன்கனாக இருந்தவர்களில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்தவராக கோலி விளங்குகிறார்.

இரண்டாவது இடத்தில் டோனி 13 வெற்றி, 3 தோல்வி, 6 டிரா பெற்றுத் தந்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?