
செக். குடியரசு டென்னிஸ் வீராங்கனையான பெட்ரா குவிட்டோவாவின் வீட்டில் திருட முயன்ற நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் குவிட்டோவாவின் இடது கையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, குவிட்டோவாவின் செய்தித் தொடர்பாளரான காரெல் தேஜ்கல், “செக். குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள குவிட்டோவாவின் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்த குவிட்டோவாவை கத்தியால் தாக்கிய திருடன், பணத்தையோ, பொருள்களையோ திருடாமல் அங்கிருந்து தப்பிவிட்டான்.
இந்த தாக்குதலில் குவிட்டோவாவின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை.
குவிட்டோவா பிரபல டென்னிஸ் வீராங்கனை என்பதால், இந்த திருட்டு முயற்சி திட்டமிடப்பட்டதாக இருந்திருக்காது என கருதுகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகி இருப்பதால், காவலாளர்கள் அவரைத் தேடி வருகின்றனர் என்று காரெல் கூறினார்.
காலில் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் குவிட்டோவா, வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.