#TokyoOlympics மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 10:16 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்றைய தினம் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

இந்நிலையில், இன்றைய தினம் மகளிர் ஹாக்கி காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒலிம்பிக்கில் முதல் முறையாக மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி.
 

click me!