
ஜப்பானில் ககாமிகஹரா பகுதியில் 8ஆவது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நாளையுடன் முடிகிறது. இதில், இந்தியா, தென் கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, கஜகஜஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்று விளையாடி வந்தன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டியில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிகும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
அதன்படி, இந்தியா தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கணக்கிலும், மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 2-2 என்ற கணக்கிலும், சீனா தைபே அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போன்று ஜப்பான் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில், இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளும், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகளும் மோதின.
Ind vs Aus, WTC Final Day 4: மழை பெய்ய வாய்ப்பு: போட்டி பாதிக்கப்படுமா?
இதில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென் கொரியாவும் 2-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் அன்னுவிற்கு ஆட்டநாயகிக்கான விருது வழங்கப்பட்டது.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.