தமிழனை கவிழ்த்த தமிழன்.. இளம் வீரர்கள் அபாரம்!! ரஹானே, ரெய்னாவிற்கு கடும் சவால்

By karthikeyan VFirst Published Oct 25, 2018, 1:19 PM IST
Highlights

தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணிகளுக்கு இடையேயான தியோதர் டிராபி போட்டி நடந்துவருகிறது. 

தியோதர் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி ஆகிய மூன்று அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. 

இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி, ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. 

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் அபிமன்யூ மற்றும் அன்மோல்பிரீத் சிங் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். 69 ரன்களில் அபிமன்யூ ஆட்டமிழந்தார். சிங்கும் 59 ரன்களில் அவுட்டானார். 

சிறப்பாக ஆடிய இளம் வீரர் நிதிஷ் ராணா அவரது பங்கிற்கு 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தியா பி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 99 ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 32 ரன்களில் தமிழக வீரர் விஜய் சங்கரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

அனுபவ வீரர் கேதர் ஜாதவ் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, இந்தியா ஏ அணி 50 ஓவர் முடிவில் 293 ரன்களை குவித்தது. 

இதையடுத்து ரஹானே தலைமையில் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய வீரர்களை கொண்ட இந்தியா சி அணி 294 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது. கடந்த போட்டியில் சோபிக்காத ரஹானே மற்றும் ரெய்னா ஆகிய சீனியர் வீரர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
 

click me!