
இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் திட்டத்தின் கீழ் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் 2018 ஏப்ரல் 8-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 11-ஆம் தேதியும், 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் அந்த இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன. இந்த ஒருநாள் தொடரானது, இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக, மார்ச் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.